June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

சேரன்மகாதேவியில் பணத் தகராறில் அண்ணன் வெட்டிக் கொலை- தம்பி கைது

1 min read

Brother killed in Cheranmakhadevi

4/11/2020

சேரன்மகாதேவி அருகே பணத் தகராறில் அண்ணன் வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

அண்ணன்-தம்பி

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள வடக்கு இடையன்குளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வக்கனி (வயது 74). இவருடைய தம்பி டேனியல் (65). கூலி தொழிலாளி.
செல்வக்கனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் தனது இடது காலை இழந்தார்.
டேனியல் தனது அண்ணன் செல்வக்கனிக்கு பணம் கொடுத்து இருந்தார். அந்த பணத்தை திருப்பி கேட்டதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை செல்வக்கனியின் வீட்டுக்கு சென்ற டேனியல், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்.
கொலை

அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த டேனியல் அரிவாளை எடுத்து செல்வக்கனியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வக்கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேனியலை கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *