August 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா ; 17 பேர் பலி

1 min read

Corona for 1,624 people in Tamil Nadu today; 17 people were killed

23/11/2020

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று17 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) 1,624 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1, 904 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 47 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது.

17 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் 17 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *