கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது
1 min read
The corona vaccine has been in use in the United States since December 11
23/12020
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 11 அல்லது 12-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என தடுப்பூசி திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா
உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு தாக்குதலுக்கு இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரத்து 701 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் நிறுவனங்கள் இறங்கி உள்ளன. பல நாடுகள் மருந்தை கண்டு பிடித்து அதை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து வருகின்றன. பல தடுப்பூசிகள் நல்ல பயனை தருவது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அவசர தேவைக்கு…
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும்-ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் செயல்திறன் 95 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தங்கள் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்த அனுமதியளிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான எஃப்டிஏ-க்கு பைசர் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கை குறித்து எஃப்டிஏ அமைப்பின் அதிகாரிகள் டிசம்பர் மாதம் 10-ந் தேதி விவாதிக்க உள்ளனர். அந்த கூட்டத்தில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 11-ந் தேதி
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கிடைத்த உடன் 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி கொண்டு செல்லப்படும் என தடுப்பூசி திட்டத்தின் தலைவர் மொன்செஃப் ஸ்லாவ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவில் டிசம்பர் 11 அல்லது டிசம்பர் 12-ம் தேதியில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.