June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

வெள்ளத்தில் சிக்கிய குட்டிகளை காப்பாற்றிய நாய்

1 min read

The dog that rescued the puppies trapped in the flood

28/11/2020

வேலூரில் வெள்ளத்தில் சிக்கிய குட்டிகளை நாய் வாயில் கவ்வி பாதுகாப்பான இடத்திற்கு தூக்கிச் சென்று காப்பாற்றிது.

தாய்ப்பாசம்

தாய்ப் பாசத்தில் மனிதர்களை விட விலங்குகள் எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை. அதிலும் மனிதர்கள் மீது அபார பற்றுக் கொண்ட நாய்க்கு தாய் பாசத்தைப்பற்றி சொல்ல வேண்டியது இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாக வேலூரில் ஒரு நிகழ்வு நடந்தது.

வேலூர் புது பஸ் நிலையம் அருகே உள்ள பாலாற்று பாலங்களுக்கு இடையே தெருநாய்கள் அதிகம் காணப்படும். அதில் ஒரு நாய் 8 குட்டிகளை ஈன்று அதை பாதுகாத்து வந்தது.
இந்த நிலையில் நிவர் புயலால் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த நாய்கள் எல்லாம் கரையை நோக்கி ஓடிவிட்டன.

ஆனால் 8 குட்டிகளை ஈன்ற நாய் தனது குட்டிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது. அது தனது குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று விட்டது.
அப்போது தாய் நாய் வெள்ளத்தில் சிக்கியது. ஆனாலும் குட்டியை விடாமல் கொண்டு சென்று கரையேறியது. அந்த நாயால் 5 குட்டிகளை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மீதம் உள்ள 3 குட்டிகளும் ஆற்றின் நடுப்பகுதியில் பாலத்தின் கீழே தவித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறங்கி 3 நாய்களையும் மீட்டனர். நாயின் பாசத்தை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களின் செயலையும் பாராட்டினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *