“எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்”- ரஜினி பேட்டி
1 min read
“I will announce my decision soon” – Rajini interview
30/11/2020
நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் தனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கூறினார்.
ரஜினியின் அரசியல்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவத்த பின்னர் அரசியில் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரது ரசிகர்கள்களும் உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால் அதன்பின் உடல் நலம் குறித்து வந்த தகவலால் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி பல்வேறு ஊடகங்கள் விவாதங்கள் செய்து வருகின்றன.
தப்போது தமிழக சட்டசபை தேர்தலுக்கான காலம் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் பிரசார களத்தில் இறங்கிவிட்டனர்.
இதனால் ரஜினி ரசிகர்களும், ரஜினியின் ஆதரவாளர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் ரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்து தன்னுடைய மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக அறிவித்தார்.
அதன்படி நேற்று சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசானைநடத்தினார்.
விரைவில்…
அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது.
அவர்கள் கருத்தை என்னிடம் கூறினார். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
இழுபறி
ரஜினி தனது முடிவை இன்று அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது முடிவை அறிவிப்பதில் இன்னும் இழுபறி நிலவுகிறதே என்று அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகிறார்.