April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் எலும்பு முறிவு

1 min read

Joe Biden fractured

30/–11/2020

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவர் இன்னும் பொறுப்பு ஏற்கவில்லை.

ஜோ பைடன் கடந்த 2018 ஆம் ஆண்டு ‘மேஜர்’ என்ற இந்த நாயை பைடன் தத்தெடுத்தார். அந்த நாயுடன் அவர் கொஞ்சி மகிழ்வார்.

ஜோ பைடன் நேற்று முன் தினம் இரவு தன் மேஜர் நாயும் மற்றும் இன்னொரு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெலாவேரின் நெவார்க்கிலுள்ள எலும்பியல் நிபுணரைச் சந்தித்ததாக அவரது அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது வலது காலின் நடுவில் இரண்டு சிறிய எலும்புகளில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதால் சில வாரங்களுக்கு அவருக்கு நடைப்பயிற்சி தேவைப்படும் என்றும் சிறப்புக் காலணி ஒன்றை அணிய வேண்டுமெனவும் டாக்டர் ஓ கானர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.