May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

நிலவில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா கொடி நாட்டியது

1 min read

China hoisted the flag next to the United States on the moon

5/12/2020

நிலவில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவதாக சீனா தனது நாட்டு தேசியக் கொடியை நாட்டியுள்ளது.

நிலவில் கொடி

கடந்த 1969-ம் ஆண்டு நிலவில் அமெரிக்கா கொடியை நாட்டியது. அதன் பின் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்த போதும் தனது நாட்டின் கொடியை நிலவில் நாட்டாமல் இருந்தது.

இதற்கிடையில், அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆராய்சி செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24-ம் தேதி சீனா விண்ணில் செலுத்தியது. லாங் மார்ச் 5 ராக்கெட் என்ற ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.

கொடியை நாட்டியது

இந்நிலையில், சேஞ்ச் 5 விண்கலம் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் விண்கலத்தில் இருந்து வெளியே வந்த ரோவர் இயந்திரம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இயங்கத்தொடங்கியது. அதன் முதல் நடவடிக்கையாக ரோவரில் சீன விண்வெளி விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டிருந்த சீன தேசிய கொடி நிலவின் மேற்பரப்பில் நாட்டப்பட்டது. இதன் மூலம், நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.

நிலவில் தங்கள் நாட்டின் கொடி நாட்டப்பட்ட புகைப்படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், ரோவர் இயந்திரம் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சீனா வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.