May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,366 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,366 people in Tamil Nadu today

5/12/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 1,366 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 1500 பேருக்கு குறைவாக பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பதிவு பற்றிய விவரங்களை மாநில சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. அதன் விவரங்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று ( சனிக்கிழமை) 1,366 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பபட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 1,407 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 66 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.

15 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 15 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.