சில்க் சுமிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகை மர்மச்சாவு
1 min read
Actress Marmachavu who starred in the film Silk Sumita Biography
12/12/2020
சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படமான
‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்த நடிகை ஆர்யா பானர்ஜி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சில்க் சமிதா வாழ்க்கை படம்
தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவர் கடந்த 1996ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மர்மம் நிறைந்த இவரது வாழ்க்கை கதையை இந்தியில் ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுத்தனர்.
2011-ம் ஆண்டு வெளியான அந்த சில்க் சுமிதா காதாபாத்திரத்தில் அதாவது கதாநாயகியாக நடித்தவர் நடிகை வித்யாபாலன். அவருடன் இணைந்து துணை கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்யா பானர்ஜி.
மேற்குவங்காளத்தை ஆர்யா பானர்ஜி சேர்ந்த இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான ’லவ் செக்ஸ் அர் டோஹா’ என்ற இந்திபடத்திலும் நடத்து பிரபலமானார். இவர் மும்பையில் மாடலிங் துறையிலும் குறிப்பிடத்தக்க பிரபலமான நபராக இருந்து வந்தார்.
பிணமாக கிடந்தார்
ஆர்யா பானர்ஜிக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு அப்பாட்மெண்டில் தனியாக வசித்துவந்தார். அவர் தனது வீட்டு வேலைக்கு மட்டுமே
ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார்.
வழக்கம்போல இன்று( சனிக்கிழமை) அந்த பணிப்பெண் வீட்டுவேலை செய்வதற்காக ஆர்யா பானர்ஜியின் வீட்டிற்கு வந்து வாசலில் இருந்த ஹாலிங் பெல்லை அடித்துள்ளார்.
ஆனால், கதவு திறக்கப்டபவில்லை. இதனால் ஆர்யா பானர்ஜியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். செல்போன் அழைப்பையும் ஆர்யா எடுக்கவில்லை. பின்னர் பணிப்பெண்
அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனாலும் பதில் ஏதும் இல்லை
இதனால், சந்தேகமடைந்த பணிப்பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் , ஆர்யா பானர்ஜி குடியிருந்த அப்பாட்மெண்ட்டிற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு பூட்டிய வீட்டில் நடிகை ஆர்யா பானர்ஜி தனது படுக்கையறையில் உயிரிழந்தநிலையில் சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணை
போலீசார் நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதபரிசோதனையின் முடிவில்தான் ஆர்யா பானர்ஜி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் நடிகையை கொலை செய்துள்ளனரா? என்ற முழுவிவரம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகையின் மர்மச்சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.