June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,218 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,218 people in Tamil Nadu today

12/12/2020

தமிழகத்தில் இன்று மட்டும் 1,218 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல்பற்றி தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( சனிக்கிழமை) 1, 218 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 97 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 10,208 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா கண்டறியவர்களில் இன்று மட்டும் 1,296 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின்
மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 75 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.

13 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் 13 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,883 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில்….

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து19 ஆயிரத்து168 ஆக உள்ளது. தற்போது சென்னையில் 3,233 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் – 349
அண்ணா நகர் – 388
தேனாம்பேட்டை – 265
தண்டையார்பேட்டை – 148
ராயபுரம் – 212
அடையாறு- 320
திரு.வி.க. நகர்- 322
வளசரவாக்கம்- 214
அம்பத்தூர்- 258
திருவொற்றியூர்- 79
மாதவரம்- 123
ஆலந்தூர்- 175
பெருங்குடி- 136
சோழிங்கநல்லூர்- 68
மணலியில் – 49

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *