மரணம் அடைந்த சித்ரா நடித்த முதல்படம் விரைவில் வெளியாகிறது
1 min read
The first film starring the late Chitra will be released soon
13/12/2020
மரணம் அடைந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்த முதல் சினிமா படம் விரைவில் வெளியாகிறது.
நடிகை சித்ரா
சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2 தினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
நடிகை சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டார் தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து வந்தார். இது அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
டெலிவிஷன் தொடரில் நடித்து வந்த வேளையில் அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது.
இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த “கால்ஸ்” என்ற படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தில் படப்பிடிப்பை நடிகர் டெல்லி கணேஷ் தொடங்கி வைத்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கினார். தமீம் அன்சாரி இசையமைத்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது.
வெளிவருகிறது
இதையடுத்து படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் வேகமாக தொடங்கி டிசம்பர் 13, பர்ஸ்ட் லுக் ரிலீஸ், ஜனவரி 1 (2021) டிரெய்லர் ரிலீஸ் மற்றும் ஜனவரி இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது.
ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக படத்தின் கதாநாயகி சித்ரா மரணம் அடைந்தார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.