May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

பாபநாசம் அணை நிரம்பியது

1 min read

The Papanasam Dam was flooded

நெல்லை மாவட்டத்தின் இருபெரும் அணைகளில் ஒன்றான  பாபநாசம் அணை நிரம்பியது.
நெல்லை, தூத்துக்குடி,   தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி பாபநாசம்  அணை நிரம்பியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  2,033 கன அடியாக உள்ளது.
இதே போன்று,  சேர்வலாறு மணிமுத்தாறு அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இன்று காலை (18-12-20) நிலவரப்படி, நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்ட விவரம் வருமாறு:-

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 142.40
அடி
நீர் வரத்து (வினாடிக்கு) : 2033.87
கனஅடி
வெளியேற்றம் : இல்லை.       

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 148.95
நீர்வரத்து, வெளியேற்றம் : இல்லை.

மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118 
நீர் இருப்பு : 106.45 அடி
நீர் வரத்து : 1132
கனஅடி
வெளியேற்றம் : 480 கன அடி

வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49
அடி
நீர் இருப்பு: 25
அடி
நீர் வரத்து, வெளியேற்றம்: இல்லை.

நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 10.62 அடி
நீர்வரத்து, வெளியேற்றம்: இல்லை.

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 27 அடி
நீர்வரத்து:  40 கன அடி
வெளியேற்றம்: 40 கன அடி
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:
பாபநாசம்: 35 மி.மீ
சேர்வலாறு: 16 மி.மீ
மணிமுத்தாறு: 10 மி.மீ
நம்பியாறு:6 மி.மீ
கொடுமுடியாறு:10 மி.மீ
அம்பாசமுத்திரம்: 8.20. மி.மீ
சேரன்மகாதேவி: 2.20 மி.மீ
நாங்குநேரி:9 மி.மீ
ராதாபுரம்: 2 மி.மீ
பாளையங்கோட்டை:5.40 மி.மீ
நெல்லை: 3 மி.மீ

தென்காசி மாவட்ட  அணைகளின் நீர்மட்டம்:
கடனாநதி
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 83.50அடி
நீர் வரத்து : 132கன அடி
வெளியேற்றம் : 132  கன அடி                            

ராமநதி
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 79.50 அடி
நீர்வரத்து : 50 கனஅடி
வெளியேற்றம் : 30  கனஅடி

கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 66.28 அடி
நீர் வரத்து : 18 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து:  5 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 86.75 அடி
நீர் வரத்து 15 கன அடி
வெளியேற்றம்: 40 கன அடி

மழை அளவு:
கடனாந்து:10 மி.மீ
ராமநதி: 15 மி.மீ
கருப்பா நதி: 17 மி.மீ
குண்டாறு: 7 மி.மீ
அடவிநயினார்: 5 மி.மீ
ஆய்க்குடி: 4.20 மி.மீ
சங்கரன்கோவில்: 6 மி.மீ
செங்கோட்டை: 5 மி.மீ
சிவகிரி: 1 மி.மீ
தென்காசி: 7.40 மி.மீ.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.