தமிழகத்தில் இன்று 1,019 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,019 people in Tamil Nadu today
26-12-2020
தமிழகத்தில் இன்று 1,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
கொரோனா பற்றி தமிழக சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் (இன்று) 1,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 13 ஆயிரத்து 161 ஆக உயர்வடைந்து உள்ளது.
இதேபோன்று இன்று 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 59 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து 1,098 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 92 ஆயிரத்து 63 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுவரை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 39 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.