June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் ; மத்திய சுகாதார மந்திரி தகவல்

1 min read

Everyone will be vaccinated against the corona vaccine for free

1.2.2021

நாடு முழுவதும் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்த நிலையில் இந்தியாவில் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. டெல்லியில் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுமா? என்று கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஹர்ஷ்வர்தன், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்” என்றார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

முன்னதாக, “கொரோனா தடுப்பூசி தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *