திப்பணம்பட்டியில் சமுதாய வளை காப்பு விழா
1 min read
Community Valaikappu Ceremony in Thippanampatti
25.9.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள
திப்பணம்பட்டியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் டாக்டர் கலைகதிரவன் எம்.எல்.ஏ. டாக்டர் ராணிஸ்ரீகுமார் எம்.பி ஆகியோர் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், திப்பணம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைகதிரவன், தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீகுமார் ஆகியோர் கலந்துகொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ், திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா, ஒன்றிய கவுன்சிலர் மேரிமாதவன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுருதி, கண்காணிப்பாளர் லாவண்யா, வட்டார ஒருங்கிணைப்பாளர் வினாயகசெல்வி, மேற்பார்வையாளர் குழந்தை திரேஸ், தேன்மொழி, ராமலட்சுமி, காந்தா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.