September 26, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட வளர்ச்சி பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆய்வு

1 min read

District Monitoring Officer reviews development works in Tenkasi district.

25.9.2026
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று (25.9.2026), மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/ தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அஜான் லூயிஸ். பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படி, அரசு தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான சேமிப்பு பெட்டகத்தினையும், காய்ச்சல் பிரிவினையும். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, SCPAR திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தினையும், புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமான இசக்கி திருமண மண்டபத்தினையும், தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் கிராமத்தில், குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தென்காசி ஒன்றியத்தில் உள்ள பாட்டாக்குறிச்சி கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், பாட்டாக்குறிச்சி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளையும், திருநங்கையருக்கான சிறப்பு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சிவராமபேட்டை கிராமத்தில் உள்ள புங்கன்கால் வரத்துக் கால்வாயில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தூர்வாரும் பணிகளையும், தென்காசி வெளிவட்டச் சாலைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இலஞ்சி மேம்பாலப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர்/தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அஜான் லூயிஸ், இ.ஆ.ப. தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், இ.ஆய. திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர் ஆரா.சிவராமன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் மருதண்டபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *