August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

2021புத்தாண்டு பலன்கள்/ மிதுனம்

1 min read
                                                               Mithunam/ 2021New year palangal/ Kaliyur Narayanan

மிதுன ராசி அன்பர்களே! பிறரிடம் இதமாக பேசி பழகும் தன்மையை கொண்டவர்கள். உங்கள் பேச்சாற்றல் மூலம் எதையும் சாதிப்பீர்கள். உங்கள் நட்பு கிறகமான கேது சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்து செல்வார்.
இந்த ஆண்டு உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக நிற்கபோகிறவர் கேதுதான். அவர் தற்போது 6-ம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார். இது மிகச்சிறப்பான இடம். அவரால் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு.மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த பொருளாதார வளம் மேம்படும்.
குருபகவான் தற்போது 8-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குருபகவான் மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள்அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்கும்.அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 9-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும்.தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
சனிபகவான் தற்போது 8-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார்.அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகும்.- இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான்.ஆனால் இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் 21-5-2021 முதல் 9-10-2021 வரை சனிபகவான் வகிக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். அவரால் கெடுபலன்கள் நடக்காது.
நிழல் கிரகமான ராகு தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலைதான்.இங்கு அவர் பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப் -பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள்ராசிக்கு 6-இடமான விருச்சிகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
கேதுவால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
ஆண்டின் தொடக்கத்தில் சிற்சில சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வளமான வாழ்வை காணலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். சிக்கனம் தேவை. கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டுகொடுத்து போக வேண்டும். சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். உறவினர் வகையில் வீண்பகை உருவாகலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உற்சாகம் பிறக்கும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.. மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். கணவன்-மனைவி இடையே அன்பு,பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும் வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெருவீர். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர்.
பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர் -கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் மேல்- அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். சிலர் அதிக செலவை சந்திக்க வேண்டியதிருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை வேலைபளு குறையும். தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடவும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். உங்கள் ஆற்றல் மேம்படு. சம்பள உயர்வு வரும். .எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும்.
வியாபாரம் புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை வளர்ச்சி இருக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். லாபம் அதிகரிக்கும். பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. குருவால் வங்கிகடன் எளிதாக கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் காணப்படுகிறது. பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். புதிய பதவி தேடி வரும்..
மாணவர்கள்சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிறப்பான பலனைக்காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பியபாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன்உள்ளதாக அமையும்.
விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டி- யது இருக்கும். நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர்.4-4-2021 முதல் 14-9-2021 வரை பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கு வதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் .பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
உடல்நலம் மனஉழைச்சல் ஏற்படலாம்.
பரிகாரம்- சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளுக்கு காணிக்கை செலுத்துங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *