மாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் 100 கோடி ரூபாய்
1 min readThe 3 day collection of the master film is 100 crore rupees
16.1.2021
விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் சினிமா மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாஸ்டர்
விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையட்டி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் படத்துக்கு தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
100 கோடி ரூபாய்
முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தெரிவித்தது. இந்நிலையில் முதல் 3 நாளில் மாஸ்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.