June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பொங்கலையட்டி ரூ.589 கோடிக்கு மது விற்பனை

1 min read

Liquor sales worth Rs 589 crore for Pongal

17.1.2021

பொங்கல் பண்டிகையையட்டி தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.

பொங்கல் பண்டிகை

பொதுவாக பண்டிகை காலங்களில் மதுவிற்பனை அதிகமாக இருக்கும். தற்போது போகி பண்டிகை, பொங்கல் மற்றும் காணும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 3 நாட்களில் ரூ.589 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகையன்று 147 கோடியே 75 லட்சம் ரூபாய், 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று 269 கோடியே 43 லட்சம் ரூபாய் என 2 நாட்களில் மொத்தம் 417 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகி இருந்தது.

சென்னையில்…

கடந்த 13 ஆம் தேதி போகி பண்டிகையன்று சென்னையில் ரூ.39.8 கோடி, திருச்சியில் ரூ.29.23 கோடி, சேலத்தில் ரூ.26.72 கோடி, மதுரையில் ரூ.28.15 கோடி, கோவையில் ரூ.24.57 கோடி என மொத்தம் ரூ.147.75 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இதையடுத்து 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று சென்னையில் ரூ.54.47 கோடி, திருச்சியில் ரூ.56.39 கோடி, சேலத்தில் ரூ.53.18 கோடி, மதுரையில் ரூ.55.25 கோடி, கோவையில் ரூ.50.18 கோடி என மொத்தம் ரூ.269.43 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 15 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் 16 ஆம் தேதியான இன்று காணும் பொங்கல் தினத்தையட்டி, சென்னையில் 38 கோடி, திருச்சியில் 36 கோடி, சேலத்தில் 32 கோடி, மதுரையில் 34 கோடி, கோவையில் 30 கோடி என மொத்தம் 172 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

ரூ.589 கோடி

இந்த விவரங்களின் மூலம் பொங்கல் பண்டிகையையட்டி கடந்த 13, 14 மற்றும் 16 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகத்தில் மொத்தம் 589 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சுமார் 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *