May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவில் இருந்து குணமான 98 வயது நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மரணம்

1 min read

98 year old actor Unni Krishnan Namboodiri dies after recovering from corona

21.1.2021

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய 98 வயது நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி மரணம் அடைந்தார்.

நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி

பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இவர் கமல்ஹாசன் நடித்த கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தர். இதுதவிர சந்திரமுகி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்தார்.

மரணம்

இந்த நிலையில், உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணமடைந்துள்ளார். இவருக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.