June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியா முழுவதும் 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

1 min read

15,82,201 people across India were vaccinated against corona

24.1.2021

இந்தியா முழுவதும் 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக – மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ‘கோவேக்சின்’, ‘கோவிஷீல்டு’ என்ற 2 தடுப்பூசிகள் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய இந்த தடுப்பூசி திட்டம் கடந்த ஒரு வாரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நேற்று சுமார் 14 லட்சம் பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி இருந்தது.

15,82,201 பேருக்கு

இந்தியா முழுவதும் எட்டாம் நாளான இன்று இதுவரை 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது 27,776 முகாம்களில் 15,82,201 சுகாதார பணியாளர்களுக்கு இன்று காலை வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட 123 பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாம். கடந்த ஒரு வாரத்தில் தினமும் சராசரியாக 2 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *