June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

பாட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் கானா பாலா

1 min read

Ghana Bala who does not get a chance to sing

25.1.2021

சினிமாவி பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கானா பாலா வருத்தத்துடன் கூறினார்.

கானா பாலா

யோகி பாபு, கருணாகரன், பிரவீன், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை இயக்கி உள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கானா பாலா, “நிறைய படங்களில் பாடியிருந்தாலும், அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.
மேலும் ட்ரிப் படத்தின் மூலம் மீண்டும் பாட வந்துள்ளதாகவும், அதற்கு வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி என்றும் கூறினார்.
தற்போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளதாகவும், அடுத்த வாரம் சென்னை மாநகர காவல் ஆணையர் அதை வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *