கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா தற்கொலை
1 min read
Kannada actress Jayasree Ramaiah commits suicide
25.1.2021
கன்டன நடிகை ஜெயஸ்ரீ ராமையா தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயஸ்ரீ ராமையா
கன்னட படவுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் தனியார் டி.வி. சேனல் நடத்தும் பிரபல ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். கடந்த பல மாதங்களாக மன அழுத்தத்தில் அவர் இருந்து வந்துள்ளார்.
இதுபற்றி தனது சமூக ஊடக பக்கத்தில் தனது வாழ்வை முடித்து கொள்ள விரும்புகிறேன் என பதிவிட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், பெங்களூருவில் உள்ள முதியோர்களுக்கான இல்லம் மற்றும் மறுவாழ்வு மையமொன்றில் அவரது இறந்த உடல் இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
தனக்கு பணவசதி உள்ளது என்றும் ஆனால், மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் அவர் தெரிவித்து வந்துள்ளார். சிறு வயதில் இருந்தே துரோகம் இழைக்கப்பட்டது என கூறியுள்ள அவர், சிகிச்சைக்காக மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிர்ச்சி
அவர் நேற்றிரவு தற்கொலை செய்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கன்னட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.