August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் செல்லம்மாள்-பாரதி திருமணநாள் விழா-பல்லக்கு ஊர்வலம்

1 min read

Chellammal-Bharathi wedding anniversary celebration-palm procession in the market

27/6/2025
கடைத்தில் செல்லமாள்-பாரதியின் 128-வது ஆண்டு திருமண நாள் விழா 4 நாள்கள் கொண்டாடப்பட்டது. கடையம் நூலகத்தில் சேவாலயா சார்பில் நடத்தப்பட்டது.
கடந்த 24-ந் தேதி இளைபாரதம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடநதது.25-ந் தேதி கானமும் கலையும் என்ற தலைப்பில் விழா நடந்தது. நேற்று 26ந் தேதி தேமதுர தமிழோசை என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
நான்காவது நாளான இன்று (27-ந் தேதி) மணநாள் விழா நடந்தது.
காலையில் பாரதி செல்லம்மாள் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட நூலக அலுவலர் சண்முகசுந்தரம் மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திருமலைகுமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடற்கரய் மத்தவிலாச அங்கதம் இந்தியாவின் புதிய எழுச்சி என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை பாரதியின் கொள்ளு பேரன் ராஜ்குமார் பாரதி வெளியிட்டார். முதல் பிரதியை செல்லமாளின் மருமகன் சுந்தர் பெற்றுக்கொண்டார்.
சேவலாயா முரளிதரன், திருவள்ளுவர் கழக தலைவர் ஆ.சேதுராமலிங்கம், செயலாளர் கல்யாணி சிவகாமி நாதன், கவிஞர் பேரா உள்பட பலர் பேசினார்கள்.
விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடந்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசும் சாற்றிதழும் வழங்கப்பட்டது.

-தகவல்: இன்பசேகரன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *