May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனை கொன்று நகைகளை கொள்ளையடித்தவன் மீது “என்கவுண்டர்”

1 min read

Jewelry store owner’s wife kills son and robs him of “encounter”

27/1/2021

சீர்காழியில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெட்டிக் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (வயது 50). இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.
தன்ராஜ் சவுத்ரி தர்ம குளத்தில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நி¬யில் இன்று (புதன்கிழமை) காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25) மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6.30 மணிக்கு தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக்கு சில மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் கதவை தட்டினார்கள். தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார். மர்ம மனிதர்கள் அரிவாள் வைத்திருந்தனர். அவர்கள் இந்தியில் பேசினார்கள்.

திடீரென்று 3 பேரும் வீட்டில் உள்ளவர்களை சரமாரியாக தாக்கினார்கள். ஆஷா அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் அவர்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பின்னர் அந்த மர்ம மனிதர்கள் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க், சிடி, ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சவுத்ரியின் காரில் தப்பிச் சென்று விட்டனர்.

பிடிபட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த தன்ராஜ் சவுதரி, அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த கொலை&கொள்ளைக் கும்பலை பிடிக்க போலீசார் துரித நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த நிலையில் தன்ராஜ் சவுத்ரியின் கார் சீர்காழி அருகே உள்ள பட்ட விலாகம் பகுதியில் போலீசார் கண்டுபிடித்தனர்.

கொலையாளிகள் சீர்காழி அருகே உள்ள எருக்கூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் மணீஷ், மணிபால், ரமேஷ் என்றும் அவர்கள் மூன்று பேரும் வடநாட்டு வாலிபர்கள் என்பதும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கொள்ளை&கொலை செயலில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

என்கவுன்டர்

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரில் மணிபால் என்பவனை கொள்ளையடிக்கப்பட்ட நகையை பதுக்கி வைத்த இடத்தை அடையாளம் காண்பதற்காக மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை அழைத்து சென்றார். அப்போது துணை சூப்பிரண்டை கீழே தள்ளிவிட்டு தப்பியோட முயற்சித்தார்.
இதனால் மணிபால் என்ற கொள்ளையனை போலீசார் என்கவுன்ட்டர் செய்து சுட்டுக்கொன்றனர்.
இன்று காலை நடந்த கொலைசம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு 3 பேரை பிடித்ததையும், அதில் ஒருவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதையும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.