தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதி
1 min read195 private hospitals allowed to administer corona vaccine in Tamil Nadu
2-.2.2021
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 195 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அரசு அனுமதி அளித்துள்ளது. 150 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 34 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தடுப்பூசி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.