சரத்குமார்-ராதிகா 20ம் ஆண்டு திருமண விழா
1 min readSarathkumar-Radhika 20th Anniversary Wedding Ceremony
2.4.2021
சரத்குமார்- ராதிகா தம்பதி 20 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள்.
சரத்குமார்-ராதிகா
பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் பிரபல நடிகை ராதிகா ஆகிய இருவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி இதே நாளில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா திருமணம் நடந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார். எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது விதியும் வினோதம் என்றும் இந்த அற்புதமான ஒற்றுமையான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நீங்கள்தான் எனக்கு வலிமையை தருபவர் என்றும் உங்களை நான் நேசிக்கின்றேன் என்றும் ராதிகா பதிவு செய்துள்ளார்.
வாழ்த்து
ராதிகாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. 20 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிகளுக்கு திரையுலகினர்களும் ஏராளமான ரசிகர்களும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.