சினிமா விழாவில் நயன்தரா-விக்னேஷ் சிவன்
1 min readNayanthara – Vignesh Sivan at the film festival
4.2.2021
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரு சினிமா விழாவில் பங்கேற்ற படம் இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரையருவர் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இவர்கள் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக சென்று கலந்து கொள்கிறார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்கள்.
கூழாங்கல் படவிழா
அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தின் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்படுகிறது.
இதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிஎஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திர்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.