எம்.ஜி.ஆருக்கு டூப் போட்ட நடிகர் மரணம்
1 min readDeath of actor who put dope to MGR
4.2.2022
சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு டூப் போட்ட நடிகர் கே.பி.ராமகிருஷ்ணன் மரணம் அடைந்தார். இவர் எம்.ஜி.ஆருக்கு மெய்க்காப்பாளராகவும் இருந்தார்.
டூப் நடிகர்
மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்தார்.
இவர் சென்னை கோபாலபுரத்தில் வசித்துவந்தார். கடந்த டிசம்பர் மாதம் 27ந் தேதி மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதில், அவரது தலையில் அடிபட்டதால், மூளையில் ரத்தக் கட்டு ஏற்பட்டதால் சுயநினைவை இழந்தார். இதையடுத்து மயிலாப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மரணம்
அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த ஜனவரி 1ந் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த கே.பி.ராமகிருஷ்ணன், சுயநினைவு திரும்பாமலேயே நேற்று( புதன்கிழமை) இறந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. மறைந்த கே.பி.ராமகிருஷ்ணனுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மனைவி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இறந்துகிவிட்டார்.