May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

ஐதராபாத்தில் கற்பழித்துக் எரித்துக் கொன்ற பெண்ணை பற்றிய படத்துக்கு அனுமதி மறுப்பு

1 min read

Denial of permission for a film about a woman who was raped and burnt to death in Hyderabad

6.2.2021

ஐதராபாத்தில் இளம் பெண் கற்பழித்து எரித்துக் கொல்லப்பட்டார். இதை மையமாக வைத்து எடுத்த படத்தை வெளியிட அனுமதி சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர்.

கற்பழிப்பு

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சை படங்களை எடுத்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2019-ல் இளம் பெண்ணை கற்பழித்து எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திஷா என்கவுண்டர் என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி உள்ளார். திஷாவாக சோனியா அகுலா நடித்துள்ளார்.

அனுமதி மறுப்பு

இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று திஷாவின் தந்தை ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பெண்கள் சங்கத்தினரும் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் திஷா என்கவுண்ட்டர் படத்தை தணிக்கை குழுவுக்கு ராம்கோபால் வர்மா அனுப்பினார்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நிறைய சர்ச்சை காட்சிகள் உள்ளதாகவும், பாலியல் பலாத்கார கொடுமையை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்து படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து மேல் முறையீட்டு குழுவுக்கு படத்தை அனுப்பி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.