ஆறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்
1 min read
Corona vulnerability is highest in six states
8.3.2021
இந்தியாவில் ஆறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 18 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவானது.
குறிப்பாக மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று உயரத்தொடங்கியுள்ளது. இதனால், தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு கூறும்போது, “மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தினமும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மாநிலங்களில் ஏற்படும் பாதிப்பு மொத்த பாதிப்பில் 86.25 சதவீதமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.