June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 556 பேருக்கு கொரோனா

1 min read

orona for 556 people in Tamil Nadu today

8.3.2021
தமிழகத்தில் இன்று மட்டும் 556 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று ( திங்கட்கிழமை) ஒரே நாளில் 556 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,55,677 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 8,39,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 3 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் சென்னையில் 2 பேரும் கோவையில் ஒருவரும் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,521 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 229 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 4,166 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 4,018 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் இன்று 7 பேருக்கும் தென்காசியில் 2 பேருக்கும் தூத்துக்குடியில் 3 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *