May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

1 min read

1 constituency allotment to Forward Bloc Party in DMK alliance

10.3.2021

திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணி

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுவிட்டன. தற்போது எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

பார்வர்டு பிளாக்

இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் தேசிய செயலாளர் தேவராஜனும், தி.மு.க சார்பில் கட்சி தலைவர் ஸ்டாலினும் கையெழுத்திட்டனர். பார்வர்ட் பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.