May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. எம்.எல்.ஏ.வான எ.வ. வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரி துறை சோதனை

1 min read

DMK MLA E.V. Income tax department inspection at 18 locations owned by Velu

25.3.2021

தி.மு.க. எம்.எல்.ஏ.வான எ.வ. வேலுவுக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தியுள்ளது.

வருமானவரி சோதனை

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் தேசிய காட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிடுகிறது. 174 இடங்களில் போட்டியிடும் அக்கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. எ.வ. வேலு போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4 மணி நேரமாக வருமான வரி துறை சோதனை நடத்தியுள்ளது.
சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இதில், எ.வ. வேலுவின் இல்லம், பள்ளி, கல்லூரிகள், அறக்கட்டளை, நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

த.மா.கா நிர்வாகி-

இதேபோல் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமாகா நகரத் தலைவர் அங்குவேல் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் சேர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போடிநாயக்கனூரில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடும் சூழ்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.