December 9, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

1 min read

Corona infection confirmed in 2,579 people in Tamil Nadu today

31/3/2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்றை கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்ட தகவல் வருமாறு:&
தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) புதிதாக 2,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,86,673 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். சென்னையில் 7 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், நாகப்பட்டினத்தில்2 பேரும், திருச்சி, தஞ்சை, கடலூர், கோவை, திண்டுக்கல், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,719 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,527 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,58,075 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 15,879 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 250 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 98 பேருக்கும், கோவையில் 273 பேருக்கும், தஞ்சையில் 106 பேருக்கும், திருவள்ளூரில் 130 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 31 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்து உள்ளது.
இன்று ஒரே நாளில் மாநகர பகுதியில் 36 பேரும், பாளையில் 4 பேரும், அம்பையில் 3 பேரும், மானூர், நாங்குநேரி, வள்ளியூரில் தலா 2 பேரும், ராதாபுரம், சேரன்மகாதேவியில் தலா ஒருவரும் என 51 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் பாளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 குழந்தைகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த அலுவலகம் 2 நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 16,589 ஆக உயர்ந்தது. இதில் 15,695 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 199 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.