தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிப்பு-
1 min readurfew in Tamil Nadu extended till April 30
31.3.2021
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30&ந் தேதி வரை நீட்டித்து- தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாகக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. அதே நேரம் தளர்வுகள் அறிக்கப்பட்டதால் ஓரளவு சகஜ நிலையில் பொதுமக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மார்ச் 31ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கை ஏப்ரல் 30ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதனை தமிழக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.