தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராக ஆ.ராசாவுக்கு உத்தரவு
1 min readThe Election Commission had earlier ordered A. Razza to appear
3.3.2021
தமிழக முதல்வர் பழனிசாமி குறித்தும், அவரது தாயார் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா புதன்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
முன்னதாக, முதல்வர் குறித்தும், அவரது தயார் குறித்தும் தி.மு.க. எம்.பி. ஆ. ராசா அவது?றாக பேசியிருந்தார். இதனை தொடர்ந்து சென்னையில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் பழனிசாமி கண்ணீர் விட்டு அழுதார். அதனை தொடர்ந்து ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆ.ராசா முதல்வர் குறித்தும் அவரது தாயார் குறித்தும் பேசியது தொடர்பாக வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு தாராபுரம் வந்தார். அங்கு பேசியபோது பெண்களை இழிவாக பேசிவது தி.மு.க.வின் நோக்கம். என குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தேர்தல் கமிஷன் ஆ.ராசா புதன்கிழமை மாலை 6 மணிக்கு தேர்தல் கமிஷனர் முன் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.