June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

டி.ஆர்.பாலு, யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா

1 min read

Corona to T.R.Palu, Yogi Adityanath

14.4.2021

டி.ஆர்.பாலு, உ.பி. முதல்&அமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டி.ஆர்.பாலு

திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி அவர் ஒரு வாரமாக வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், ”தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மருத்துவர்கள் ஆலோசனையைப் பின்பற்றி என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று உறுதியானால் தனிமைப்படுத்திக்கொள்ளவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆனார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *