April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

புதுசெருப்பு / சிறுகதை / தபசுகுமார்

1 min read

New Shoes / Short Story By Tapasukumar

கண்ணாயிரம் எதிலும் கண்ணும்கருத்துமாக இருப்பார். ஆனால் காசு செலவுசெய்யவேண்டுமானால் ரொம்ப யோசிப்பார். ஒரு செருப்புவாங்கினால் அது பழசானாலும் விடமாட்டார். நூறு தையல்போட்டுஅதை அதைபயன்படுத்துவார்.

அவர்மனைவி எவ்வளவோ சொல்லியும் கேட்கமாட்டார். அன்று இரவு திருமண நிகழ்ச்சிக்குபுறப்பட்டபோது பாதிவழியில் செருப்பு அறுந்துவிட்டது. கண்ணாயிரம் அக்கம்பக்கத்தில் செருப்புதைக்கிறார்களா என்று பார்த்தார். ஆள்கிடைக்கவில்லை. அரைஞாண் கயிற்றில் கிடந்தஊக்கு நினைவுக்குவந்தது. அறுந்த செருப்பை சரிசெய்துகொண்டு திருமண வீட்டுக்கு சென்றுவந்தார்.
பஸ்சைவிட்டு இறங்கி வீட்டுக்குவேகமாக நடந்தபோதுகாலில் ஏதோ சுருக்கென்றுகுத்தியது.
ஆ என்றுஅலறினார். கால்பாதத்தில்இருந்து ரத்தம்கொட்டியது. செருப்பில்குத்தியிருந்த ஊக்கு கழன்று பாதத்தை பதம் பார்த்திருந்தது.

கண்ணாயிரம் நொண்டிக் கொண்டே வீடு போய்சேர்ந்தார். அவர் மனைவி திட்டினார். பழையசெருப்பை எடுத்து வெளியே வீசினார். கண்ணாயிரம் கால்நடக்க முடியாமல் ஒருவாரம் கஷ்டப்பட்டார். அதன்பிறகு பழைய செருப்பைதேடினார். அவர் மனைவி சத்தம் போட்டார். போய் புது செருப்பு வாங்குங்க என்றுசொல்லிபணம்கொடுத்தார்.
கண்ணாயிரம் விருப்பம் இல்லாமல் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்கு சென்று புது செருப்பு வாங்கினார். அதைமாட்டிக் கொண்டு கம்பீரமாக வீட்டுக்குநடந்தார். வழியில் கோவில்திருவிழா. கூட்டம்அதிகமாகஇருந்தது. கண்ணாயிரம்அங்கேசென்றார். புதுசெருப்பு வெளியே போட்டுட்டு போகமுடியுமா என்று யோசித்துக்கொண்டு. நின்றார். அப்போது ஒருவர், “என்ன பெரியவரே, அங்க காசு கொடுத்து டோக்கன் வாங்கிட்டுசெருப்பை கழற்றி போட்டுட்டுபோங்க” என்றார்.
காசு கொடுப்பதில்கண்ணாயிரத்துக்குஉடன்பாடில்லை. கோவிலின் ஒரு பகுதியில் ஓரமாக சிலர் மொத்தமாக செருப்பை கழற்றி போட்டிருந்தார்கள். அதை பார்த்தார்த்தார்
உடனேஅங்கேகிடந்த கயிறை எடுத்துசெருப்பின் நுனியில் கட்டினார். மற்றோரு செருப்பில் வாழை நாறை எடுத்து கட்டினார். எல்லாம் அடையாளம் காண்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ஆனாலும் செருப்பு சேர்ந்து கிடந்தா தூக்கிட்டு போயுடு வாங்களே என்ன செய்யலாம் என்று நினைத்தவர் ஒருசெருப்பை ஒருமூலையிலும் மற்றொரு செருப்பை அடுத்த மூலையிலும் போட்டார்.
பின்னர் கோவிலுக்குள் சென்றுவிட்டு சிறிது நே ம் கழித்து வெளியே வந்தார். கோவில் அருகே அவர் செருப்பு போட்ட பகுதியில் செருப்புக்கள் சிதறிகிடந்தன.
கண்ணாயிரத்துக் குபகீரென்றது. வாழைநாறு, துணிகயிறு என்றுசெருப்பின் அடையாளத்தை கொண்டு தேடினார். அங்கும் இங்கும்பார்த்தார் .வாழைநார் கட்டிய ஒரு செருப்பு தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஓடிச் சென்று அதைஎடுத்தார். மார்போடுஅணைத்துக்கொண்டார்.
கண்கள் கசிந்தது. மற்றொரு செருப்பை தேடினார். எங்கு தேடியும் காணவில்லை. அவருக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது. என் புதுசெருப்பை எங்கேஎன்று புலம்பினார். அப்போது அங்குவந்த டிப்டாப் வாலிபர், என்ன பெரியவரே, நாட்டில் திருட்டு பெருகிவிட்டது. நானும் புதுசெருப்பை கழற்றி போட்டிருந்தேன். ஒரு செருப்பு இங்கே இருக்கு மற்றோரு செருப்பை காணவில்லை. யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றான்.
அவன் வைத்திருந்த செருப்பில்கயிறு கட்டியிருந்ததை பார்த்த கண்ணாயிரம், நீங்க வைத்து இருப்பது என்று கத்தினார்.

அந்தவாலிபர் உடனே, என்ன, புது செருப்பு திருட எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க, நீங்க கையில் வைத்திருப்பது என்னோட செருப்புதான் கொடுங்க என்றுஅடம்பிடித்தான்.
கண்ணாயிரம் கலங்கிவிட்டான். என்செருப்புக்கு அடையாளம் இருக்கு. உன்செருப்புக்கு அடையாளம் உண்டா என்று வாதிட்டார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

டிப் டாப் வாலிபருக்கு ஆதரவாக சிலர் பேசினர். என்ன பெரிசு புது செருப்புல ஏதோ கயிறை கட்டிப்புட்டு உன்செருப்பு என்கிறதா என்றுஅதட்டினர்.
அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர், நடந்ததை விசாரித்தார். டிப்டாப் வாலிபரை பார்த்து, தம்பி, நீங்ககாசு இல்லாதவரா, காலணி பாதுகாப்பகத்துலக உங்கபுதுசெருப்பைபோட்டிருக்கலாமே, ஏன் இங்கே வந்து போட்டிங்க. என்றார்.
அதற்கு அந்த வாலிபர் அதுஎன்இஷ்டம். அதைகேட்கநீங்க யார் என்று முழங்கினான்.
விவசாயிக்கு ஆதரவாக சிலர்வந்தனர்.
ஏய் பேசுறது சரியில்லை. உன்நடவடிக்கையே சரி இல்லையே. என்றவாறு அவனை மேலும் கீழும்பார்த்தனர். அவன் காலில் புது செருப்பு அணிந்திருந்தான்.
ஏம்பா, நீ காலில் அணிந்திருக்கிறாயே அதுயார் செருப்பு என்று வாலிபரிடம் கேட்டனர்.
அதற்கு அவன் அதுவும் என் செருப்புதான் என்றான்.
அப்படியா, புதுசெருப்பு அடிக்கடி திருட்டு போவதாக புகார் வந்துச்சு. வசமாமாட்டிக்கிட்டே என்று விவசாயி வேடத்தில் வந்த போலீஸ்காரர் அந்த வாலிபரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு இழுத்துசென்றார்.
அதைப்பார்த்தும் கண்ணாயிரம் சார் என் புது செருப்பு என்று கத்தினார்.
அவரிடம் ஆதாரத்தை காட்டி வாங்கிட்டு போங்க என்றார் போலீஸ்காரர். உடனே கண்ணாயிரம் செருப்பு வாங்கிய கடையில் கொடுத்த பில்லை காட்டி புது செருப்பை மீட்டுச் சென்றார்.
பில்லையும்செருப்பையும் மனைவியிடம் காட்டி விட்டு பத்திரமான இடத்தில் வைத்தார்.
& வே. தபசுக்குமார், புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.