July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் முன் மயங்கிய சுடிதார்சுதா/ நகைச்கதை/தபசுக்குமார்

1 min read

Sudha Mayankam ASudha Mayankam Aadhithar/ Comedy/Tapasukumar

23/10/2025
கண்ணாயிரத்துக்கு பாராட்டுவிழா சிறப்பாக முடிந்தது. அப்போது அனைவருக்கும் 5 நட்சத்திர ஓட்டலில் விருந்து வழங்கப்படும் என்று கோடீஸ்வரர் அறிவித்தார். பிறரை சிரிக்கவைத்து உண்ண வைத்து மகிழ்வதே தனக்கு மகிழ்ச்சி என்று கூறினார்.
கம்பன் கலை அரங்கம் அருகில் உள்ள ஓட்டலுக்கு கண்ணாயிரம் அவர் மனைவி பூங்கொடி ஆகியோர் சாரட் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவரும் அந்த ஓட்டலின் முன் உள்ள புல்வெளி மைதானத்துக்குச் சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் பெஞ்சு போடப்பட்டிருந்தது.அவரவருக்கு என்ன விருப்பமோ அதை வாங்கி திருப்தியா சாப்பிடலாம் என்று கண்ணாயிரம் அறிவித்தார்.
அருவாஅமாவாசை உருவிய பேண்டை இழுத்துவிட்டுக்கொண்டு வேகமாக ஓட்டலுக்கு விரைந்து வந்தார்.சுடிதார் சுதா, பயில்வான், இறைச்சிக்கடைக்காரர், ஜவுளிக்கடைக்காரர், மோட்டார்சைக்கிள் வாலிபர் ஆகியோர் அங்கு வந்தனர். பூங்கொடி அவர்களிடம், வேண்டும் என்பதை கேட்டுவாங்கிச் சாப்பிடுங்கள்..என்று சொல்ல,சுடிதார்சுதா அவரிடம்,” ம்..எல்லாம் கண்ணாயிரம் யோகம் என்றார்.
கூட்டம் அலை மோதியது.
அருவாஅமாவாசை, தட்டை தூக்கியபடி, ஏங்க பழைய கஞ்சி, வெங்காயம் கிடைக்குமா? என்று கேட்க, ஓட்டல் ஊழியர்கள் சிரித்தனர்.
ஏங்க அது நீங்க வீட்டில தினம் சாப்பிடுறதுதானே.. இங்கே நீங்க விரைட்டியா சாப்பிடுங்க..என்றனர்.
அருவாஅமாவாசை, ஏங்க எனக்கு கஞ்சி குடிச்சாதான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.. எனக்கு கஞ்சி வேணும் என்று அடம்பிடித்தார். அப்போது, பூங்கொடி அங்கே வந்தார். ஏம்பா இது டூமச்..ரொம்ப ஒரி பண்ணாதீங்க..உங்களுக்கு கஞ்சிதானே வேணும். ரைஸ் இருக்கு தயிர் இருக்கு.. இரண்டையும் சேர்த்து சாப்பிடுங்க என்று சொல்ல, அருவாஅமாவாசை..ம் அதுவும் சரிதான் என்றார்.
ரைஸ்சையும் தயிரையும் சேர்த்து ஊறுகாய் வைத்து சாப்பிட்டார். அதைப் பார்த்த ஜவுளிக்கடைக்காரர், என்னவே, விதவிதமா சாப்பாடு இருக்கும்போது தயிர்சாதம் சாப்பிடுகிறீர் என்று கேட்க, அருவாஅமாவாசை சிரித்தார்.: பழையதை என்னைக்கும் மறக்கக் கூடாது என்று சொன்னார்.
உடனே ஜவுளிக்கடைக்காரர் சிரித்தபடி, யோவ், பழையதை மறக்கக்கூடாதுங்கிறது பழைய கஞ்சியை அல்ல,கடந்துபோன பழைய வாழ்க்கையை மறக்கக்கூடாது என்று சொல்ல, அருவாஅம்மாவாசை, தயிர் சோறை சாப்பிட்டபடி,பழைய சோறை சாப்பிட்டத்தான் பழைய வாழ்க்கையும் நினைவுக்கு வரும் என்றார்.
உடனே ஜவுளிக்கடைக்காரர், பழையது எல்லாம் நினைவுக்கு வருதா என்று கேட்க, அருவாஅமாவாசை, ஆமா! உங்களுக்கு ஐம்பதாயிரம் பணம் தரணும்.. அதைநான் மறக்கல என்றார்.
அதைக்கேட்ட, ஜவுளிக்கடைக்காரர்,ம்..அதைநான் சொல்லவரலை..எப்பவேணுமானாலும் உங்கக்கிட்ட வாங்கிக்கிடலாம் என்றார்.
அங்கிருந்து சென்ற ஜவுளிக்கடைக்காரர், ஒரு தட்டில் பிரியாணி எடுத்துக்கொண்டு மட்டன் பீசை கடித்து சுவைத்து சாப்பிட்டார். அப்பாட,அந்த ஜம்பதாயிரம் பணத்தை ஒருவழியாக நினைவு படுத்தியாச்சு..என்று மகிழ்ச்சி அடைந்தார்.
இறைச்சிக்கடைக்காரரும் பயில்வானும் மட்டன் பிரியாணியை ஒரு பிடிபிடித்தனர். சுக்கா வறுவலையும் வாங்கி சுவைத்தனர்.
சுடிதார் சுதா தோசைக்கு சிக்கன் குருமா வாங்கி சுவைத்துச் சாப்பிட்டார். அனைவரும் சாப்பிடுவதை கண்ணாயிரமும் பூங்கொடியும் பார்த்து ரசித்தபடி இருந்தனர். அவர்களைப் பார்த்த கோடீஸ்வரர், என்ன சாப்பிடாம இருக்கீங்க.. உட்காருங்க.. நான் உங்களுக்கு பரிமாறுகிறேன் என்று அவர்களை ஒரு மேஜை முன் உட்காரவைத்தார். அவர்கள் வேண்டாம்…வேண்டாம் என்க, அவர் விடவில்லை. கண்ணாயிரத்தையும் பூங்கொடியையும் அமரவைத்து இலையில் பிரியாணி வைத்தார்.முட்டை, இறால், சிக்கன் பீஸ் எல்லாம் அள்ளிவைத்தார்.சாப்பிடுங்க..சாப்பிடுங்க என்று அவர்களை உற்சாகப்படுத்தினார்.அவரது அன்புக்கு கட்டுப்பட்டு அவர்கள் சாப்பிடத் தொடங்கினர்.அப்போது கண்ணாயிரம்,உங்களுக்கு நாங்கள் பரிமாறுவோம்.நீங்க சாப்பிடணும் என்றார்.
அதற்கு அவர் புன்னகை செய்தவாறு,நான் விரும்பிச் சாப்பிடும் உணவை நீங்கள் பரிமாறினால் நான் தாராளமாக சாப்பிடுவேன் என்றார்.
கண்ணாயிரமும் சரி என்றார்.கோடீஸ்வரர் ..ம் பார்க்கலாம் என்று சொல்ல,கண்ணாயிரம் ம்..நாங்க உங்களுக்கு பரிமாறி அசத்திடுவோம் என்றார்.
கோடீஸ்வரர் சிரித்தவாறு, நான் சாப்பிடுவதைப் பார்த்து நீங்களே அசந்திடுவீங்க என்று சொல்ல, அவ்வளவு சாப்பிடுவீங்களா..பார்க்கலாம் என்றபடி பிரியாணியை சாப்பிட்டு முடித்தார்.
பூங்கொடியும் கஷ்டப்பட்டு சாப்பிட்டார். ஏய் பூங்கொடி.. சீக்கிரம் சாப்பிட்டு முடி. நமக்குப் பரிமாறிய கோடீஸ்வரருக்கு நாம உணவு பரிமாறணும் என்று சொல்ல, பூங்கொடியும், இதோ சாப்பிட்டு முடிச்சிட்டேன் என்றவாறு கைகழுவச் சென்றார்.
கண்ணாயிரமும் எழுந்து சென்று கை கழுவிட்டு வந்தார்.
கோடீஸ்வரரிடம்,நீங்கள் இந்த மேஜை முன் அமருங்கள்.
நாங்கள் விதவிதமாக உணவு பரிமாறுகிறோம் என்றவாறு இலை எடுத்துவந்தார்.
பிரியாணி,சிக்கன் பிரைட்ரைஸ், மட்டன் பீஸ்,சுக்கா வறுவல்,முட்டை எல்லாவற்றையும் கொண்டு வந்து காட்டினார். உங்களுக்கு எதை பரிமாறவேண்டும். சொல்லுங்கள் என்று கண்ணாயிரம் கேட்க,கோடீஸ்வரர், கண்ணாயிரம் உங்களுக்கு பிடித்தமானவைகளை கொண்டு வந்திருக்கீங்க.. எனக்குப் பிடித்தமானதை நீங்கள் கொண்டவரவில்லை என்று சொன்னார். அதைக்கேட்ட கண்ணாயிரம் விழித்தார்.
உங்களுக்கு எது பிடிக்கும் என்று அவர் கேட்க,கோடீஸ்வரர் ,எனக்கா..ஒரு கப் கேப்பைக்கூழ் என்று சொல்ல,கண்ணாயிரம்,என்ன சொல்லுறீங்க.. என்று அதிர்ச்சியுடன் கேட்க,கோடீஸ்வரர், ம்..ஆமா! டாக்டரின் கண்டிப்பான உத்தரவு என்றார் சிரித்தபடி.

கண்ணாயிரம் கண்கள் கலங்கியது.அப்போது கோடீஸ்வரரின் உதவியாளர் ஒரு டம்ளரில் கேப்பைக்கூழை கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கோடீஸ்வரர் அதை ருசித்து குடித்தபடி கண்ணாயிரத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவர் பதில் சொல்ல முடியாமல் நின்றார்.
இந்த நேரத்தில், பயில்வான், இறைச்சிக்கடைக்காரர் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு நின்று கொண்டிருந்தனர்.
சுடிதார் சுதா சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் ஐஸ்கிரீம் சுவைத்துக் கொண்டிருந்தார். சுற்றி நின்ற பெண்களிடம், நகைச்சுவை ஜோக்ஸ் சொல்லி சிரிக்கவைத்தார். அவரும் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
திடீரென்று மயக்கம் வர கீழே மயங்கி விழுந்தார். அதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணாயிரமும் பூங்கொடியும் சுடிதார்சுதாவை நோக்கி ஓடினார்கள்.(அடுத்த தொடரில் நிறைவடையும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *