June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு ஞானம் கொடுத்த இளநீர்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

The coconut that gave wisdom to Kannayiram/ Comedy story/ Tapasukumar

6/9/2025
கண்ணாயிரம் தன் மாமனார் மீது துப்பாக்கியால் சுட முயன்ற போலீஸ்காரரின் துப்பாக்கியை மடக்கிப்பிடித்ததால் அது குறிதவறிவெடிக்க அந்த குண்டு பாய்ந்து இளநீ ஒன்று கண்ணாயிரம் தலையில் விழுந்ததால் அவர் மயங்கிவிழுந்தார்.
அதைப்பார்த்த பூங்கொடி, அய்யோ அம்மா என்று அலற, தப்பி ஓடிவந்த
மாமனார் கண்ணாயிரம் வீட்டுக்குள் ஓடிப் போய் பதுங்கிக்கொண்டார்.
பூங்கொடி வீட்டுக்குள் சென்று பாத்திரத்தில் தண்ணி எடுத்துக்கொண்டு ஓடிவந்தார். கீழே விழுந்து கிடந்த கண்ணாயிரம் முகத்தில் தண்ணீரை தெளிக்க, அவர் தூக்கத்திலிருந்து எழுவதுபோல எழுந்தார்.
நான் எங்கே இருக்கேன் என்று கேட்க, நீங்க இங்கேதான் இருக்கீங்க என்று பூங்கொடி சொன்னார். அதற்கு கண்ணாயிரம் தலையைத் தடவிப்பார்த்துவிட்டு, இது ஏன் வீங்கி இருக்கு என்று கேட்க, இந்த இளநீர் உங்க தலையிலே விழுந்துட்டு என்று பூங்கொடி சொல்ல, கண்ணாயிரம், ஐ.சி.என்றார்.
அதைக்கேட்ட பூங்கொடி, இது ஐ.சி. இல்லங்க..இளநீ என்றுசொல்ல, கண்ணாயிரம் சிரித்தார். பூங்கொடி நீ இன்னும் இன்னோசெண்டாவே இருக்க” என்று சொல்ல, பூங்கொடி” ஏங்க நான் இப்போ இந்தியா சென்ட் போடுறதில்லை.. வெளிநாட்டு சென்டுதான் போடுறேன் என்று சொன்னார்.
கண்ணாயிரம் உடனே தலையில் கைவைத்தபடி, பூங்கொடி..நான் சென்டை சொல்லலை.. நீ அப்பாவியா இருக்கன்னு சொல்லவந்தேன் என்றார்.
அதைக்கேட்ட பூங்கொடி, ஏங்க அப்பா மேல எனக்கு பாசம் அதிகம் தான் அதுக்காக என்னை அப்பாவின்னு சொல்லுறீயளா.. என்று மடக்க, கண்ணாயிரம், அய்யோ நீ ராங்கா புரிஞ்சிக்கிற..’ என்றார்.
உடனே பூங்கொடி, என்ன நான் ராங்கியா.. என்று கேட்க, கண்ணாயிரம், நோ..நோ..நீ ராங்கி இல்ல ராணி என்றார்.
அப்படி தமிழ்ல்ல பேசுங்க..இந்த இளநீ உங்க தலையிலே விழுந்தாலும் விழுந்துச்சு.. நீங்க இங்கிலீசா பேச ஆரம்பிச்சிட்டீங்க என்று புலம்பினாள்.
அப்போது கண்ணாயிரம் மாமனார் அருவா அமாவாசை அருவாளருடன் வந்தார். கண்ணாயிரம் தலையில் விழுந்த இளநீரை வெட்டி, மாப்பிளை.. இந்த இளநீயை குடிங்க.. எல்லாம் சரியாகிடும் என்று கொடுக்க, கண்ணாயிரம் அவரைப் பார்த்து மாமா நல்லா இருக்கீங்களா என்று கேட்க, அவர், மாப்பிளை ஐஅம் பைன் என்றார்.
கண்ணாயிரம், ஓ.கே.ஓ.கே என்று சொல்லிவிட்டு இளநீரை குடித்துவிட்டு, பைன் பைன் என்று பாராட்டினார்.
பூங்கொடிக்கோ தனது தந்தை ஆங்கிலம் பேசியதால், என்ன நடக்குது இங்கே..எங்கே போய் இங்கீலிஸ் படிச்சீங்க” என்று கத்த, அவர், கொஞ்சநாள் ஜெயிலில் இருந்து வந்தேம்மா.. அங்கே படிச்சேன்.. ஆமா..மாப்பிளை இங்கிலீஸ் பேசுறாரே.. அவர் ஜெயிலில் இருந்தாரா என்று கேட்க, பூங்கொடி, அப்படியெல்லாம் இல்லை அப்பா.. என்கூடத்தான் இருந்தாரு என்க, அருவா அமாவாசை, என்னம்மா சொல்லுற உன்னுடன் இருக்கிறதும் ஜெயிலில் இருக்கிறதும் ஒண்ணா என்க, பூங்கொடி கோபம் அடைந்தார்.
அப்பா..என் கணவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர். அவரது படத்தை அடிக்கடிப் பார்ப்பார். தேங்காய் தலையில் விழுந்ததால் மூளை சரியாகி இங்கிலீசில பேசறாரு அப்பா என்றாள்.
உடனே அருவாஅமாவாசை, ஏம்மா..என்னை அப்பான்னு சொல்லாத, டாடி அப்படின்னு சொல்லு.. என்க, பூங்கொடி, சரி தாடி என்றாள்.
உடனே அருவாஅமாவாசை, மைடியர் டாட்டர்.. தாடி இல்ல..டாடி அப்படின்னு சொல்லு என்க, பூங்கொடி, டாட்டி என்றாள்.
அவர்,பைன் பைன் என்க, கண்ணாயிரம், ஒண்டர்புள் என்றார்.
மிஸ்டர் அங்கிள்.. இந்த வெப்பனையெல்லாம் எடுத்துட்டுவராதீங்க.. என்று அருவாஅமாவாசையிடம் கண்ணாயிரம் சொல்ல, அவர் மிஸ்டர் மாப்பிள்ளை.. நீங்க சொல்லுறதால நான் இனி இந்த வெப்பனை தூக்கமாட்டேன் என்று அருவாளை தன் மகளிடம் கொடுத்தார்.
மை டாட்டர். புத்தருக்கு போதி மரத்தடியிலே ஞானோதயம் வந்தது. உன் கஸ்பண்டுண்டுக்கு தென்னைமரத்து அடியில புத்தி வந்திருக்கு.. என்க, கண்ணாயிரம், மிஸ்டர் மாமனார், வெரிகுட், வெரிகுட் என்று பாராட்டினார்.
துப்பாக்கியால் சுடவந்த போலீஸ்காரர் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தார். அதைப்பார்த்த கண்ணாயிரம், கான்ஸ்டபுள் சார்.. ஐஅம் ஸ்டெடி..யூ.. டோண்ட் வொர்ரி.. என்க, கான்ஸ்டபுள், எஸ்.எஸ்.. ஐஎம் அண்டர்சேண்ட் என்றார்.
ஓ.கே.கன்னை சரியா யூஸ்பண்ணுங்க என்று கண்ணாயிரம் சொல்ல, போலீஸ்காரர், எஸ்.சார்..என்று சலுயூட் அடித்தார்.
கண்ணாயிரம், தேங்ஸ் என்றபடி வீட்டுக்கு வேகமாகச் சென்றார். பின்னால் அருவாஅமாவாசையும் பூங்கொடியும் சென்றனர். கண்ணாயிரம் வீர நடை நடக்க, அதைப் பார்த்த பூங்கொடிக்கு மகிழ்ச்சி தாங்கமுடியல.. என் ஹஸ்பண்டுக்கு சுத்திப்போடணும் என்று சொல்லியவாறு சென்றாள்.
இந்த நிலையில் கண்ணாயிரத்துக்கு புத்தி வந்திட்டு புத்தி வந்துட்டு என்று ஊரெல்லாம் செய்தி பரவியது. இதைக் கேள்விப்பட்ட ஜவுளிக்கடைக்காரரு தன் ஆதரவாளர்களுடன் கண்ணாயிரம் வீட்டுக்கு வந்தனர். கண்ணாயிரத்தைப்பார்த்து ஜவுளிக்கடைக்காரர், வணக்கம் என்று சொல்ல, கண்ணாயிரம், குட் மார்னிங்.. நைஸ் அ மீட்யூ என்க, ஜவுளிக்கடைகாரருக்கு ஒன்றும் புரியவில்லை.
கண்ணாயிரம் சார்..எனக்கு நீங்க ஐம்பதாயிரம் ரூபாய் தரணும் என்று சொல்ல, கண்ணாயிரம் அவரிடம், பிப்டி தவுசண்ட்.. ஓ.கே.வெரி சூன் ஐ கிவ்மி என்று சொன்னார்.
ஜவுளிக்கடைக்காரர், ஓ..ஜம்பதாயிரம் தந்திடுவேன்னு சொல்றீங்களா.. வெரிகுட்,வெரிகுட்..” என்று பாராட்டினார்.
எல்லாம் தலையிலே இளநீ விழுந்த மகிமைய்யா..எனக்கு கடன்தராம ஏமாத்துறவங்க தலையிலே எல்லாம் தேங்காயைத்தான் உடைக்கணும்.அப்பத்தான் சரிவரும் என்க, அதைக்கேட்ட அவரது ஆதரவாளர்கள் பாதிபேர், ஐயோ தலைக்கு ஆபத்து என்றவாறு அங்கிருந்து ஓடினர்.
கண்ணாயிரத்தைப் பார்த்து ஜவுளிக்கடைக்காரர், ரொம்ப ரொம்ப தேங்ஸ் என்க, கண்ணாயிரம், நோ மென்சன் என்று சொல்ல, ஜவுளிக்கடைக்காரர், என் பணம் வந்துட்டு.. என் பணம் வந்துட்டு என்று சொல்லியபடி ஓடினார்.
அப்போது சுடிதார்சுதாவும் பயில்வானும் கண்ணாயிரம் வீட்டுக்கு வந்தனர். என்ன ஜவுளிக்கடைக்காரருக்கு ரூபாய் கொடுத்திட்டிங்களா என்று கண்ணாயிரத்திடம் சுடிதார் சுதா கேட்க, அதற்கு அவர், நோ..நோ..விரைவில் தருகிறேன் என்றூதான் சொன்னேன் என்க, பிறகு ஏன் என் பணம் வந்துட்டு என் பணம் வந்துட்டுன்னு ஜவுளிக்கடைக்காரர் சொல்லிட்டுப்போறாரு.. என்று சுடிதார்சுதா கேட்க, கண்ணாயிரம், நம்பிக்கைதான் வாழ்க்கை என்றார்.
அதைக்கேட்ட சுடிதார்சுதா,பரவாயில்லையே..கண்ணாயிரம் தத்துவம் எல்லாம் பேசுறாரே என்க, அருவாஅமாவாசை, எல்லாம் கோகநெட் ட்ரிதான் காரணம் என்றார்.
கண்ணாயிரம் கல,கல வென்று சிரித்தார். நான் இனி புதிய உலகைக் காணப் போகிறேன்.அப்பாவி மக்களுக்காகப் பாடுபடப் போகிறேன் . ஏன் என்றால் லைப் இஸ் வெரிசாட்..என்றார்.
அதைக்கேட்ட சுடிதார்சுதா , கண்ணாயிரம் ஆங்கிலத்தில் அழகாகப் பேசுகிறாரே.. வெரி இன்டலிஜண்டு என்று பாராட்டினார்.
கண்ணாயிரம்,நோ..நோ..ஐஎம்அ ஆடனரி மேன்.. என்றார். பயில்வான் சிரித்தபடி, கண்ணாயிரம் நீ நல்லா பேசுற.. என்க, கண்ணாயிரம், எல்லாம் பகவான் செயல் என்றார்.
அடடா..பக்தியும் கொட்டுதே.. கண்ணாயிரம் எங்கேயோப் போயிட்டாரே..என்றார் பயில்வான்.
உடனே கண்ணாயிரம், எஸ்.நவ் ஐஎம் வெரிவெல்..என்க, எல்லோரும் கண்ணாயிரத்தை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பில் வேகமாக வந்தார். கண்ணாயிரம் எழுந்து சென்று, வெல்கம் சார் என்று இன்ஸ்பெக்டரின் கையைக் குலுக்கி வரவேற்றார். அவர்,தேங்ஸ் என்றபடி கண்ணாயிரத்துடன் நடந்தார். பிளீஸ் டேக் யூவர்சீட் என்று கண்ணாயிரம் சொல்ல, இன்ஸ்பெக்டர் அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தார்.
கண்ணாயிரம் அவரிடம், டீ ஆர் காபி என்று கேட்க, அவர் நோ தேங்ஸ் என்றார்.
பின்னர், மிஸ்டர்கண்ணாயிரம். நீங்கள் தீவிரவிதிகளை பிடித்துக் கொடுத்ததற்காக, அக்டோபர் 2-ந் தேதி அரசு சார்பில் உங்களுக்கு பாராட்டுவிழா. அதில் உங்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். நீங்களும் உங்கள் மனைவியும் கலந்து கொள்ளவேண்டும். 2_ந்தேதி தயாரா இருங்கள்..விழா நடைபெறும் கம்பன் கலை அரங்கத்துக்கு உங்களை சாரட் வண்டியில் அழைத்துச் செல்வோம்.. தேங்ஸ் என்றார்.
கண்ணாயகரம்,மிக்க நன்றி என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் எழுந்து சென்றார்.
அருவாஅமாவாசைக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை. மாப்பிள்ளை..உங்களுக்கு இப்போது கோல்டன் டைம்..பிக்அப் பண்ணிக்கிடுங்க என்று சொல்ல, கண்ணாயிரம், ஐ நோ அங்கிள் என்றார்.
மகிழ்ச்சி அங்கு தாண்டவமாடியது. மாடிப்படியில் ஏறி ஏறி இறங்கினார்.
அக்டோபர் 2 ந்தேதி எப்போது வரும் என்று கண்ணாயிரம் காத்திருந்தார்.
தீவிரவாதிகளின் ஆதரவாளர்களும் அந்தத் தேதியில் கண்ணாயிரத்தைத் தீர்த்துக்கட்ட காட்டுக்குள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *