திருடிய கொரோனா தடுப்பூசியை திருப்பி வைத்த திருடன்; மன்னித்துவிடுங்கள் என கடிதம்
1 min read
The thief who returned the stolen corona vaccine; Letter as sorry
23/4/2-21
அரியானா மாநிலத்தில் திருடியது கொரோனா தடுப்பூசி மருந்துகளை போலீஸ் நிலையம் அருகே வைத்து சென்ற திருடன் இது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது என்றும் தன்னை மன்னித்துவிடும்படியும் கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தான்.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருத்துகள் மருத்துவமனைகளில் இருந்து திருடப்பட்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் சம்பவங்களுடம் வருகிறது.
அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,710 கொரோனா தடுப்பூசி டோஸ்களை திருடன் நேற்று முன்தினம் திருடி சென்றுவிட்டான். சேமிப்பு கிடங்கின் கதவை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 1,270 கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களை திருடி சென்றுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். திருடனை தேடி வந்தனர்.
திருப்பி வைத்தான்
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளை திருடிய அவற்றை திருடனே ஜிண்ட் மாவட்ட போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலையே வைத்து சென்று சென்றுவிட்டான்.
போலீஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு சென்ற அந்த திருடன் டீக்கடைக்காரரிடம் ஒரு பையை கொடுத்துள்ளார். மேலும், தான் போலீசாருக்கு உணவு டெலிவெரி செய்து வருவதாகவும்,வேறு இடத்திற்கு விரைவாக செல்ல இருப்பதால் இதை போலீசாரிடம் கொடுத்துவிடும்படியும் அந்த பையை டீக்கடையில் வைத்து விட்டு சென்றார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக டீக்கடைக்கு சென்று டீக்கடைக்காரரிடம் திருடன் கொடுத்த பையை சோதித்து உள்ளனர். அப்போது அந்த பையில் ஜிண்ட் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
மன்னித்துவிடுங்கள்
கொரோனா தடுப்பூசிகளுடன் ஒரு துண்டு சீட்டில் கடிதம் இருந்தையும் போலீசார் கண்டனர். அந்த கடித்தத்தில் ‘இது கொரோனா தடுப்பூசி என்று எனக்கு தெரியாது… மன்னித்துவிடுங்கள்’ என எழுதப்பட்டிருந்தது.
திருடிய கொரோனா தடுப்பூசிகளை திருடனே மீண்டும் போலீஸ் நிலையம் அருகே வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.