May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

“உரிய நேரத்தில் ஆக்சிஜன் கொடுக்காதது ஏன்?”- மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கேள்வி

1 min read

“Why not give oxygen in a timely manner?” – Delhi High Court question to the Central Government

1.5.2021-

டெல்லியில் இன்று 8 பேர் பலியானதை அடுத்து உரிய நேரத்தில் ஆக்சிஜன் கொடுக்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை

கொரோனா 2வது அலை பரவலில் மருத்துவ அக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தாக்கலான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது.

இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறியதாவது:-

தலைக்கு மேல் வெள்ளம்

தலைக்கு மேல் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இப்போது நீங்கள் தான் எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டும். 8 உயிர்கள் பலியாகியுள்ளன.
இதையெல்லாம் கேட்காமல் காதுகளை மூடிக்கொண்டிருக்க முடியாது. நீங்கள் தான் டெல்லிக்கு அன்றாடம் 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். அதைக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு ஆகும்.

நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது 490 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடுக்காதது ஏன்?

மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டும் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கொடுக்காதது ஏன்?

மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கொடுப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்

ஆக்சிஜனை கொண்டுவருவதற்கான டேங்கர்களையும் மத்திய அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.