June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

3 வது முறையாக பதவியேற்பு: மம்தா பானர்ஜி பிரதமர் மோடி வாழ்த்து

1 min read

Inauguration for the 3rd time: Mamata Banerjee congratulates Prime Minister Modi

5/5/2021
மேற்கு வங்காள முதல்-மந்திரியாக 3 வது முறையாக பதவியேற்றுக்கொண்ட மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அந்தக் கட்சிக்கு கடும் போட்டியாக திகழ்ந்த பாரதீய ஜனதா தோல்வி அடைந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் நடந்த 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

ஆனாலும் அவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து மம்தா பானர்ஜி, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி வாழ்த்து

கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “மம்தா ஜிக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *