May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

பிளஸ்-2 வகுப்புகளுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

1 min read

Unit selection through WhatsApp for Plus-2 classes; Publication of guidelines

19/5/2021
பிளஸ்-2 வகுப்புகளுக்க வாட்ஸ்ஆப் முலம் நடத்தப்படும் அலகுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அலகுத் தேர்வு

12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக வாட்ஸ்ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

  • வாட்ஸ்ஆப்பில் மாணவியருக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும்.
  • மாணவ மாணவியர்களுக்குத் தனித்தனியாக வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.

தனித்தாளில் எழுத வேண்டும்

  • மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித் தாளில் எழுத வேண்டும்.
  • விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
  • வாட்ஸ்ஆப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக்கூடாது
  • ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.