May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

இன்றும், நாளையுடம் மட்டும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி; கடைகள் இரவு 9 மணிவரை திறக்கலாம்

1 min read

Government and private buses are allowed only today and tomorrow; Shops can be open until 9 p.m.

20.5.2021

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கில் மால்கள் திறக்க அனுமதி இல்லை என அரசு கூறியுள்ளது.

இன்று, நாளை மட்டும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி
அரசு பேருந்துகள்
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.5.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

  • இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும்.
  • பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
  • மால்கள் திறந்திட அனுமதி கிடையாது.

அரசு பேருந்துகள்

  • வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.