June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 22,651 பேருக்கு கொரோனா; 463 பேர் சாவு

1 min read

Corona for 22,651 people in Tamil Nadu today; 463 deaths

4/6/2021
தமிழகத்தில் இன்று 22,651 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 463 பேர் உயிரிழந்து உள்ளனர். 33,646 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 22,651 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,95,402 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 12,513 பேர் ஆண்கள், 10,138 பேர் பெண்கள். இன்று 33,646 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,00,306 ஆக உயர்ந்தது.

இன்று 463 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,128 ஆக அதிகரித்து உள்ளது.

6 மாவட்டங்கள்

இன்று 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னை 1971 பேருக்கும், கோவையில் 2810 பேருக்கும், ஈரோட்டில் 1691 பேருக்கும், சேலத்தில் 1187 பேருக்கும், தஞ்சையில் 1004 பேருக்கும், திருப்பூரில் 1161 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லையில் இன்று 256 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர். தென்காசியில் 226 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். தூத்துக்குடியில் 365 பேர் இன்று பாதிப்படைந்த நிலையில் 4 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *