இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது
1 min read
The incidence of corona in India is further reduced
5.6.2021
இந்தியாவில் கடந்த 58 நாட்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோன பாதிப்பு குறைந்துள்ளது.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் கடந்த சில வாரங்களாக குறையத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி அதிர வைத்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல கொரோனா குறையத்தொடங்கியிருப்பது மக்களை சற்று ஆறுதல் அடையச்செய்துள்ளது.
இந்திய கொரோனா நிலவரங்கள் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 1,20,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று கொரோனா பாதிப்பால் 3,380 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15.5 லட்சமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 1.97 லட்சம் பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.