பள்ளிபள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்
1 min read
Tamil Nadu tops school education performance list
6.6.2021
மத்திய அரசு வெளியிட்டுள்ள பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு மற்றும் கேரளா முதலிடத்தில் உள்ளன.
தரவரிசை குறியீடு
கடந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டில் இருந்து மாநிலங்களின் பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டை ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது 3வது முறையாக 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
அவர் இதுபற்றி தனது டுவிட்டர் பக்த்தில் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் தரவரிசை குறியீட்டு மதிப்பெண்களை மேம்படுத்தி உள்ளன என்று குறிப்பிட்டு உள்ளார்.
பள்ளிகல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு குறித்து மத்திய அரசு ஒன்று, இரண்டு, என10 கிரேடுகளாக மாநிலங்களை வரிசை படுத்தி உள்ளது. இந்த வரிசையில் முதல் கிரேடில் எந்த மாநிலமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்
மேலும் இரண்டாவது கிரேடில் தமிழகம், கேரளா,உள்பட ஐந்து மாநிலங்கள் 900 முதல் 950 மார்க்குகள் பெற்றுள்ளது.
மூன்றாமிடத்தில் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, குஜராத் , மராட்டியம், அரியானா, டெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
நான்காம் இடத்தில் ஆந்திரா, டையுடாமன், இமாச்சல்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, திரிபுரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
கடைசி கிரேடான 10 ம் இடத்தை லடாக் யூனியன் பிரதேசம் பிடித்துள்ளது.