கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது
1 min read
The incidence of corona in India is lower than in the last 2 months
6.6.2021
ந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் தினந்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு, இப்போது நாள்தோறும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை தினசரி பாதிப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 364 ஆக இருந்தது. அது நேற்று 1 லட்சத்து 20 ஆயிரத்து 529 பேரைாக குறைந்தது. இந்த நிலையில், இன்று காலை கொரோனா பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
1.14 லட்சம் பேர்
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 9 ஆயிரத்து 339 ஆக உள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து ஒரநாளில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 232பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 2 கோடியே 69 லட்சத்து 84 ஆயிரத்து 781- பேர் குணம் அடைந்துள்ளனர்.
2,677 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,677 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்து 759 ஆக உள்ளது.
தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 77 ஆயிரத்து 799 ஆக உள்ளது.